முஸ்லிம் எதிர்ப்பு ஊடகங்களுக்கு கண்டனம் !!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 27, 2019

முஸ்லிம் எதிர்ப்பு ஊடகங்களுக்கு கண்டனம் !!!

இயேசு நாதர் உயிர்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் மனிதாபிமானத்திற்கு அப்பாற்ப்பட்டவை. இஸ்லாம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளாத அத்தாக்குதலுக்கு முழு முஸ்லிம் உலகும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் IS பயங்கரவாதிகள் அமைப்பு அதனை பொறுப்பேற்றுக் கொள்வதாக ஆதாரமற்ற செய்தியொன்றினை இந்திய ரோய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதுடன், அவ்வமைப்பின் சஹ்றான் என அழைக்கப்பட்ட அபூஉபைதா என்பவரே இதற்கான சூத்திரதாரி எனவும் இனங்கானப்பட்டுள்ளது. 

சூத்திரதாரி இஸ்லாம் மதத்தவராக தன்னை அடையாளம் காட்டியுள்ள போதிலும், முஸ்லிம்களில் எவரும் இத்தாக்குதலை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளவுமில்லை. குறித்த சூத்திரதாரியை சுதந்திரப் போராளியாகவோ, தலைவனாகவோ, அல்லது ஒரு முஸ்லீமாகவோ கடைநிலையில் ஒரு மனிதனாகத்தானும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

இந்நிலையில் முஸ்லிம்கள் மீதான தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இயக்குனர்களும், ஏஜெண்டுகளும் மிக கூடியளவிலான தமது முஸ்லிம் எதிர்ப்பு பரப்புரைகளை இவற்றை சாட்டாக வைத்து செயற்ப்படுத்த தொடங்கியுள்ளனர். தமது கட்டுப்பாட்டின் கீழான ஊடகங்களைக் கொண்டே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கையில் சகஜ வாழ்வினை குலைக்கும் நோக்குடன் தமிழ் முஸ்லிம் கலவரம் ஒன்றினை தொடருவதற்கான எல்லா வகையிலான நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றமை தெளிவாகியுள்ளது. தமது எஜமானர்களுக்கு எல்லா வகையிலும் வாலை ஆட்டும் பிராணி போன்ற இவர்களின் ஊடக அத்து மீறல் முஸ்லிம் மக்களின் மனங்களில் மிக ஆழமான புண்ணாகி வருகின்றது. 

அதேவேளை, தமிழர் போராட்டங்களின் போது முஸ்லிம் பொதுமக்கள் மீது தமது அகங்கார வெறியை காட்டிய பாசிச வாதிகளை இன்று அவர்களே போற்றிப் புகழவும் அவர்கள் தயங்கவில்லை. இவ்வாறு வரலாறுகளை திரித்து முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் ஊடகங்களை நாம் வினயமாக நடந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். 

அத்துடன் இவ்வாறான இன முறுகலைத் தோற்றுவிக்கும் செயல்களில் இருந்து விடுபட்டு ஊடகங்கள் நடுநிலையாக செயற்பட வேண்டும் என்பதே எமது அவா !!!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages