சஹ்ரானின் மரணத்தை உறுதிசெய்ய டீ.என்.ஏ பரிசோதனை??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 26, 2019

சஹ்ரானின் மரணத்தை உறுதிசெய்ய டீ.என்.ஏ பரிசோதனை???


26.04.2019 மு.ப 10.30
உயிரித்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ​மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான் என்ற நபர், இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்று ஒரு தரப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், தாக்குதல்களின் போது சஹ்ரான் உயிரிழந்துள்ளதாக, பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது.
எவ்வாறெனினும், ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், சஹ்ரான் என்பவர் உயிரிழந்தார் என்றே கூறப்பட்டது. இருப்பினும், குண்டுதாரியின் புகைப்படத்துக்கு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் தோற்றத்துக்கும் தொடர்பில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், பாதுகாப்புத் தரப்பு மேற்கொண்ட விசேட ஆய்வுகளின் போது, சஹ்ரான் உயிரிழந்துள்ளதாகவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவுத் உயிரிழந்த நபரின் தலையைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதியான முடிவொன்றுக்கு வருவதற்காக, மரபணுப் பரிசோதனையான டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
26.04.2019 மு.ப 10.30
படைத்தரப்புப் புலனாய்வுத்துறையை, தற்போதைய அரசாங்கம் பலவீனமாக்கியுள்ளது என்றும் அதுவே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமெனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும், இவ்வாறான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாமெனச் சந்தேகம் வெளியிட்டார்.
ஊடகப் பிரதானிகளுடனான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி தலைமையில், இன்று (26) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சுக்கான புதிய செயலாளரை, விரைவில் நியமிப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து, பூஜித் ஜயசுந்தர, இன்றைய தினம் பதவி விலகுவார் எனத் தான் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.
நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி, அவர்களை நாம் பாதுகாக்க வேண்டுமென்றும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு, ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்பேற்ற வேண்டுமென்றும் கூறினார்.
அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவங்களைக் காரணங்காட்டி, வெளிநாட்டுப் படையினர் இலங்கைக்குள் நுழைய வாய்ப்பளிக்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்த ஜனாதிபதி, ஆனால், தந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு, வெளிநாடுகளின் உதவிகள் பெறப்படுமென்றும் கூறினார்.
நட்பு நாடொன்று, இந்தத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை வழங்கி, தாக்குதல் எவ்வாறு நடக்குமெனக் கூறினாலும், அது தொடர்பான தகவல்கள் வெ ளிவரவில்லை என்றும் பொறுப்பைத் தட்டிக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் ஐ.எஸ் அமைப்புக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி சூளுரைத்தார்.
புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதால், அவர்களைப் பாதுகாக்க, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் இலங்கையில் சுமார் 130 -140 வரையான ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாமெனச் சந்தேகிப்பதாகவும் அவர்களைக் கைது செய்து, அந்த இயக்கத்தை முற்றாக ஒழிப்பதாகவும் கூறிய ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம், தௌஹீத் ஜமாஅத்தைத் தடைசெய்யக்கூடிய வரையறைகள், இல்லையென்றும் இதற்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுமென்றும் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
26.04.2019 மு.ப 10.15
நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு, இன்று வௌ்ளிக்கிழமை (26) இடம்பெறும் ஜும்ஆ தொழுகையை இடைநிறுத்துவதற்கு, முஸ்லிம் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages