பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்க்கப்பட வேண்டியது ; பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 29, 2019

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்க்கப்பட வேண்டியது ; பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம்


பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் (CTA) சிறுபான்மையினருக்கு எதிரானதென நேற்று 28.03.2019ம் திகதி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற சபையின் 12 வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் தெரித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
1979ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) ACT 48 Of 1979 பிரிவு 29ல் இச்சட்டம் மூன்று வருடங்களுக்கு உரித்தானது, தற்காலிகமானதெனவும் கூறப்பட்டது. இச்சட்டம் 1982ம் ஆண்டு 10ம் இலக்க சட்டத்தின் மூலம் 29ம் பிரிவு நீக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டில் அமுலிலிருந்த சமயத்தில் இந்நாடு பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கப்படவில்லை. இருப்பினும், தற்போது இதற்கு மாற்றமாகக் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் (CTA) நிறைவேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருகின்றன.
இச்சட்டமூலம் ஜனநாயகத்திற்கு விரோதமானதென்ற அடிப்படையில் சர்வதேச, தேசிய ரீதியில் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில், எமது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடுகின்ற அமைப்புக்களும் கட்சிகளும் இதற்கெதிரான கோசங்களை முன்னெடுப்பதுடன், எதிர்காலத்தில் இச்சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதனால் நாடு எதிர்கொள்ளவுள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து வருகின்றன.
இன்றைய சூழ்நிலையில், சிறுபான்மைக் கட்சிகளைச்சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கெதிராக எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில் உள்ளமை கவலையளிக்கின்றது.
இச்சட்டமூலம் நிறைவேற்றப்ப்படுமாக இருந்தால் சிறுபான்மையினர் குறிப்பாக, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மீறப்படுவதோடு, யுத்த காலத்தில் அனுபவித்த கொடுமைகளை விடவும் மோசமான நிலைமையினை இச்சட்டத்தால் அனுபவிக்க நேரிடும் என்ற பாரிய அச்சம் நிலவுகின்றது.
எனவே, இதனால் ஏற்படப்போகும் எதிர்கால விளைவுகளைக் கருத்திற்கொண்டு எமது பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இச்சட்டத்திற்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்பதோடு, இச்சபையில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளான இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கட்சிகளைச்சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்சட்டமூலத்தை எதிர்க்க வேண்டுமென்ற கோரிக்கை, அழுத்தங்களை விடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதாக எமக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார். .

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages