அட்டாளைச்சேனையில் மு. கா வெற்றி உப தவிசாளர் ஹனிபாவுக்கு வாழ்த்துக்கள் ; நசீர் எம்.பிஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவி தவிசாளரை வாழ்த்துகிறேன்
=================================
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ். எம்.எம்.ஹனீபா சேரை   பாராட்டுவதோடு அவரின் தன்னலமற்ற மக்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

ஏக இறைவனின் துணையால் ஹனிபா சேர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்வெய்துகிறேன். 

நல்லுள்ளம் கொண்ட நேர்மாறல் கொள்ளாத நேர்மையுள்ள கல்வி மகான் மக்களுக்கு சேவையாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய ஹனிபா சேர்  உதவி  தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பதனால்  தவிசாளருடன் இணைந்து  இச்சபை நடவடிக்கைகள் சீராகவும் சிறப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கின்றேன். இவரது மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். 

அல் ஹாஜ் ஏ.எல்.முஹம்மட் நஸீர் (பா.உ)
நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்

Post a Comment

0 Comments