ஜனாதிபதி கொலை சதி ; வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்தியப் பிரஜை(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்யவும் மேலும் பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூரு பரப்பியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  இந்திய பிரஜை அவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார். 
இதற்கான அறிவிப்பை கோட்டை பதில் நீதிவான் ஜயந்த டயஸ் நாண்யக்கார இன்று விடுத்தார். 
கடந்த 5 மாதங்களாக இந்த விவகாரத்தில் குறித்த இந்திய பிரஜை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிலையிலேயே இவ்வாறு அவ் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் உரிய வீசா இன்றி இலங்கையில் தங்கிருந்தமை தொடர்பில் சி.ஐ.டி. அவருக்கு எதிராக தனியான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக அவர் எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

Post a Comment

0 Comments