அட்டாளைச்சேனை கோணவத்தை மக்கள் உதுமாலெப்பைக்கு எதிராக கண்டனம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 6, 2019

அட்டாளைச்சேனை கோணவத்தை மக்கள் உதுமாலெப்பைக்கு எதிராக கண்டனம்


அட்டாளைச்சேனை கோணவத்தை ( நியுஸ்டார்) கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா நிதியை தடுத்ததாக கூறி முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு எதிராக அப் பிரதேச மக்கள் பெரும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.

சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண விளையாட்யடுத்துறை அமைச்சு கோணவத்தை கடற்கரை பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு சுமார் இருவது இலட்சம் ரூபா நிதியை இவ்வருடத்திற்கு ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளது.

இப்படியான நிலையில் கோணவத்தை மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றி வேறு ஒரு பிரதேசத்தின் கடற்கரை  மைதானத்திற்கு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இதற்கு இணக்கம் தெரிவித்த ஆளுநர் கோணவத்தை மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இடைநிறுத்தி அவ்நிதியை முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை வேண்டுகின்ற மைதானத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாகவும் இம் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

இதனை கேள்விப்பட்ட அப் பிரதேச மக்கள் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பைக்கெதிராக பெரும் கண்டனத்தையும் தமது அதிர்ப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages