Header Ads

Breaking News

முஸ்லீம் சமூகத்தை பிழையாக சித்தரிக்க வேண்டாம் ; பாராளுமன்றில் நஸீர் எம்.பி

-Parliament Reporter-
நாங்கள் பௌத்த மத குருமார்களை பாதுகாத்திருக்கின்றோம், பௌத்த மதத்தை மதிக்கின்றோம். இருப்பினும் முஸ்லிம்களை வேண்டுமென்றே சீண்டுவதும், முஸ்லீம் இனத்தை குறிவைத்து தாக்குவதும் மிக கண்டனத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் சற்று முன் பாராளுமன்றில் தெரிவித்தார். 

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது ஆனாலும் அவர்களின் மீதான சட்ட நடவடிக்கைகள் எடுக்க யாரும் தடை இல்லை, இருப்பினும் முழு முஸ்லீம் சமூகத்தை இங்கு குற்றவாளியாக சித்தரிக்க முயல்வது மிகவும் கோழைத்தனமானதாகும். 

முஸ்லீம் மக்களின் சமாதானமான வாழ்க்கைக்கு இங்குள்ள இந்த உயர் சபையிலுள்ள அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

No comments