About Me

header ads

கரும்புக் காணிகளை முஸ்லீம் காங்கிரஸ் மீட்கிறது ; சதிகள் குறுக்கீடுகளை மறுக்கிறது விவசாய சமூகம்



சீனிக்கூட்டுத்தாபனம் முஸ்லிம்களின் காணிகளை தம் வசப்படுத்தியுள்ளமை தொடர்பிலான விவசாயிகளும் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்கள் மற்றும் பொறுப்புவாய்ந்த  அமைச்சருடன் இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பானது மு.கா வின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்குபற்றுதலுடன், அமைச்சர் நவீன் திஸாநாயக்கே, அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் நவீன் தனது உரையில் , அமைச்சர் ஹக்கீம் இந்த அரசாங்கத்தின் முதுகெலும்பு. அவரின் வேண்டுகோளினை என்னால் தவிர்க்க முடியாது. விவசாயிகளின் தேவைப்பாடுகளை யாரும் புறக்கணிக்க முடியாது. இப்போது நாம் ஒரு சுயாதீன குழுவை நியமிப்பதன் மூலமாக சரியான தீர்மானம் ஒன்றிற்குள் வரமுடியும் என்கிறார்.
  

Post a Comment

0 Comments