அட்டாளைச்சேனையின் உப தவிசாளராகிறார் T. ஆப்தீன் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 20, 2019

அட்டாளைச்சேனையின் உப தவிசாளராகிறார் T. ஆப்தீன்அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 11 வட்டராங்களில் 8 வட்டாரங்களை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றிருந்த நிலையலும்; தனித்து நின்று ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலையை புதிய தேர்தல் முறை ஏற்படுத்திருந்தது.

இருந்த போதும் மொட்டுக் கட்சியின் ஒரு உறுப்பினரின் ஒத்தாசையுடன் மொத்த ஆசனங்களில் அரைப்பகுதியை பெற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அதிஷ்ட சீட்டிலுப்பின் மூலம் தவிசாளர் பதவியை தனதாக்கியது.

துணைத் தவிசாளர் பதவிக்கான போட்டியில் இதே வழிமுறையைப் பின்பற்றிய போதும் அப்பதவி தேசிய காங்கிரஸின் கைகளுக்கு சென்றது முஸ்லிம் காங்கிரசுக்கு பலத்த அடியாக மாறியது. 

இப்படியான நிலையில் துணைத் தவிசாளராகவிருந்த எம்.எஸ்.ஜெஃபர் தனது பதவியை திடிரென  இராஜினமா செய்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அப்படி அவர் பதவி விலகியது உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவ் வெற்றிடத்திற்கு புதிய ஒருத்தரை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.

புதிய துணைத்தவிசாளரை நியமிக்கும் பொறிமுறையில் அதிகமான உறுப்பினரின் ஆதரவைக் கொண்ட நபரே துணைத் தவிசாளராக நியமனம் பெறுவர்.

இந் நிலையில் அடுத்த தணைத்தவிசாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ளது. சென்ற முறை அதிஷ்டத்தை இழந்த பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் மீண்டும் துணைத் தவிசாளராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமீம் ஆப்தீனை தணைத் தவிசாளராக நியமித்தால் மாத்திரமே நான் ஆதரவளிப்பேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் மொட்டு கட்சியின் உறுப்பினர். அதே வேளை தேசிய காங்கிரஸின் உறுப்பினர் ஒருவரும் தமீம் ஆப்தீன் வருவதையே தான் விரும்பவதாக நமது  இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களில் ஒருத்தர் ஏற்கனவே தமீம் ஆப்தீனுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன் வந்துள்ளதுடன் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் எனது வட்டாரத்திற்கு எனது வேண்டுகோளுக்கமைய நிறைய திட்டங்களை முஸ்ஸிம் காங்கிரஸ் செய்துள்ளது எனவும் பாராட்டியுள்ளார்.

துணைத் தவிசாளருக்கான வெற்றிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் துணைத் தவிசாளர் பதவியை போட்டியின்றி பெற்றுக் கொள்வார் என நம்பப்படுகின்றது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages