கல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 17, 2019

கல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்


கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தனது சொந்த நிகழ்ச்சி நிரலில்ன் கீழ் சில வைத்தியசாலைகளையும் ஊழியர்களையும் புறக்கணிப்பது வருந்தத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்துள்ளார். 

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள  வைத்தியசாலையில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் அஸ்லம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அரசியல் ரீதியில் மக்களின் தேவைகளை நிவர்த்திக்கும் பொருட்டு நாம் பல்வேறு அசௌகரீகங்களுக்கு மத்தியில் சேவையாற்றுகின்றோம். இப்பணியில் ஒரே சேவையை நோக்கியதாக மாத்திரம் நாம் செயற்படுவதில்லை.  கல்வி,  விவசாயம் ,விளையாட்டு,  சுகாதாரம், சுற்றாடல், ஜீவனோபாயம் என்று எல்லா திசைகளிலும் நாம் பரந்த பார்வையை செலுத்த வேண்டியுள்ளது. 

இந்நிலையில்  அதிகாரிகள் எங்களோடு தோளோடு தோள் நின்றே மக்கள் தேவைகளை நிவர்த்திக்க வேண்டியுள்ளது இருப்பினும் சில அதிகாரிகள் தமது வக்கிரத்தை மக்களின்  மீது சுமத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வைத்தியசாலையின் வளங்களை சுரண்டி பின்னர் வைத்தியசாலையை மூடுவதே சிலரின் நோக்கமாக இருந்தால் அது நடக்காது. எனவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages