About Me

header ads

Political Gossip ; தேசியப்பட்டியல் எம்.பிக்கு பெருகும் மக்கள் ஆதரவு


-உமர் அலி -
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற அதிகாரம் குறித்த பிரதேசத்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலை ஏலவே பலமுறை காணப்பட்டிருந்தாலும், இம்முறை தேசியப்பட்டியல் வழங்கப்பட்டிருக்கும் நபர் மிகுந்த மக்கள் ஆதரவுள்ள ஒருவராக மாறி வருவது சிரேஷ்ட, மற்றும் வளர்ந்து வரும் சில அரசியல் பிரமுகர்களுக்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் குறித்த பிரதேசத்தின் பிரமுகரை ஓரங்கட்டும் முயற்சியில் சிலர் ஒப்பாரிகளை  வசைபாடல்களாக முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். 

விசேடமாக மக்கள் தொடர்பற்று நீண்டகாலமாக பல்வேறு சாக்குப் போக்குகளை கூறிவந்தவர்கள் மக்கள் காலடிக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தை இன்று ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை அக் கட்சியின்  வளர்ச்சிப் போக்கிற்கு மிக சாதகமானதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் தமது சுய நலனுக்காக பிரதேச வாதத்தினை இவர்கள் உண்டு பண்ண முனைவது மிக சிக்கலான நிலையை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Post a Comment

0 Comments