ரணில் அழுத்தம் ; முடிவுக்கு வந்தது யுத்தம்


நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இருவரும் தமக்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் இடையில் ஊடகங்கள் வாயிலான பலத்த கருத்து மோதல் ஏற்பட்டது. இவரும் தமக்கு இடையில் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்தி விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் இருவருக்கும் இடையில் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

Post a Comment

0 Comments