About Me

header ads

ஒலுவில் மதீனாவின் வித்தியாரம்பம் ; பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதி

ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழாவின் பிரதம அதிதியாக நசீர் எம்.பி.
=============================

அக்கறைப்பற்று வலயத்திற்குட்பட்ட ஒலுவில் அல்/மதீனா வித்தியாலயத்தின் இவ்வாண்டு தரம் -1க்கு அனுமதி பெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் கே.எல்.அமீர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ் ஏ.எல் முஹம்மட் நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் புதிதாக அனுமதி பெற்ற மாணவர்கள் தரம்-2 மாணவர்களினால் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதுடன், வருகை தந்த அதிகளை நடைபவணியில் பாடசாலையிலிருந்து விளையாட்டு மைதானம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. வருகை தந்த பிரதம அதிதி தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்த்து மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எம்.ஜே.எம்.அன்வர் நௌசாட், பாடசாலை அபிவிருத்தி இணைப்பாளர் எம்.ஐ.அன்ஸார், மற்றும் ஒலுவில் ஜும்ஆ பெரிய பள்ளித் தலைவர் ஐ.எல் ஹைதர் அலி, ஓய்வு பெற்ற சிறுவர் நன்நடத்தை அதிகாரி எம்.ஏ.எம்.வசீர்டீன், வைத்தியர் எம்.எம்.பைறுஸா, சிரேஷ்ட விருவுரையலாளர் என்.அருந்திரன், மற்றும்  பாராளுமன்ற உறுப்பினரின் வெகுசன தொடர்பு அதிகாரி எம்.ஜ.எம்.நயீம் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பொற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது இருபத்தெட்டு வருடம் இணையற்ற சேவை குருபக்தி குறையாத குணக் குன்று #ராணி ரீச்சர் அவர்களுக்கு பிரதம அதிதி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments