அம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் !!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 18, 2019

அம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் !!!-ஏ.எல்.நசார் - 

தனது கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்து எதிர்வரும் தேர்தல்களில் அதிக ஆசனங்களை பெற வேண்டுமென்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை சிந்திக்கின்றது.

குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை தமது கட்சி கொண்டிருந்த நிலையிலும் இம் மாவட்டத்திற்கு தலையேற்று முறைப்படுத்த சிறந்த ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.

அமைச்சர் அமிரலி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிறப்பான தலைமைத்துவத்தை வழங்குவது போன்று அம்பாரை மாவட்டத்திற்கும் பொருத்தமான ஒருத்தர் தலைமையேற்க முன்வரும் பட்சத்தில் கட்சியின் பலத்தை இன்னும் அதிகரிக்கலாம்.

கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயில் சம்மாந்துறை பிரதேசத்தோடு தனது அரசியலை மட்டுப்படுத்தியுள்ளதாலும் அதே போன்று நிந்தவூர் தவிசாளர் தாஹூர் நிந்தவூருக்கும் முன்னாள் தவிசாளர் அன்ஸில் பாலமுனைக்கும் பொத்துவில் பிரதேசத்திற்கு எஸ்.பி.மஜீத் மற்றும் முஸாரப் சாய்ந்தமருதுக்கு ஜெமில்,சிறாஸ் என அவர்களது பிரதேச எல்லைக்குள் நின்றே தமது அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல என்பது கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்களின் நிலைப்பாடு  

இவற்றைக் கருத்தில் கொண்ட கட்சியின் தலைமை அம்பாரை மாவட்டம் முழுவதும் கட்சியின் பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு பொருத்தமாக நபராக  முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீனை பார்க்கின்றது.

அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது.

இச் சந்திப்பு கட்சியின் நலனுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்ததாக இரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

நாடு பூராகவும் அறியப்பட்ட சிந்தனை வாதியான வேதாந்த சேகு இஸ்ஸதீன் அம்பாரை மாவட்டத்திற்கு தலைமையேற்று கட்சிப் பணியில் தீவிரமாக களமிறங்கும் பட்சத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்னும் வீரியத்துடன் பயணிக்கும் என அவரின் ஆதரவாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages