Header Ads

Breaking News

நசீர் எம்.பி ஆலங்குளத்திற்கு கதிரைகள் அன்பளிப்பு


-அலுவலக செய்தியாளர் -

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் முஹம்மட் நசீர் எம்.பி யின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து ஆலங்குளம் வைட்டோ முன் பள்ளி பாலர் பாடசாலைக்கு ஒரு தொகை கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஆலங்குளம் மாதர் அமைப்பின் ஊடாக நசீர் எம்.பி யால் 31/12/2018 வைட்டோ முன் பள்ளி பாலர் பாடசாலை நிர்வாகத்திடம் ரூபா 150,000 பெறுமதியிலான கதிரைகளை வழங்கி வைத்தார்.
ஆளங்குலம் வைட்டோ முன்பள்ளி பாலர் பாடசாலையின் ஆசிரியர் எஸ்.பாயிமா தலைமையில் நடைபெற்ற விடுகை விழாவில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, எம். பி யின் செயலாளர்  எம். ஜே. எம் அன்வர் நௌசாட் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான டீ. அப்தீன், ஏ.எஸ்.எம்.உவைஸ், றஹ்மானிய்யா அதிபர் எம்.ஏ.சீ.எம் உபைதுல்லாஹ்,மற்றும் எம்.பி வெகுசன தொடர்பு அதிகாரி எம்.ஐ.எம் நயிம், முன்பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments