Header Ads

Breaking News

விரைவில் தேசிய அரசாங்கம் ; சந்திரிக்காவுக்கு முக்கிய அமைச்சு


பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமை தங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் ஏற்கனவே  முன்னணி அரசுடன் இணைந்துள்ள 6 உறுப்பினர்களில் 4 உறுப்பினர்களும் இவர்களுடன் இணையவுள்ளதாகவும், பியசேன கமகே மற்றும் லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுதந்திரக்கட்சியின் சுயாதீன குழுவுக்கு தலைமை தங்குவதற்காக சந்திரிக்கா மீண்டும் ஐ.தே.க வின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் நுழையவுள்ளார். 

அதேவேளை இச்சுயாதீன அணியுடன் இணைவதன் மூலமாக தேசிய அரசினை உருவாக்கி அமைச்சரவை மற்றும் ராஜாங்க, பிரதி அமைச்சுக்களை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இவ்வரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முக்கிய அமைச்சொன்றை பொறுப்பெடுப்பார் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

No comments