தேசிய அரசாங்கம் அமையும் ; அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஐக்கிய தேசிய முன்னணியுடன்  கூட்டணி அரசாங்கத்தின் கொள்கையினை ஏற்றுக் கொண்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மீள் செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை மீள்செலுத்துவதுடன்,  மக்களுக்கான அபிவிருத்தியினையும் முன்னெடுக்க  ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணியமைத்துக் கொள்வதுடன்  அனைத்து  பங்காளி கட்சிகளையும் தேசிய அரசாங்கத்தின் ஊடாக ஒன்றிணைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்  ஐக்கிய தேசிய முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதர கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments