ஓட்டமாவடியில் மு.கா வுக்கு எதிரான பத்திரிகையாளர் மாநாட்டில் மு.கா உறுப்பினர்கள் ; தவிசாளர் அஸ்மி குற்றச்சாட்டு


-எஸ்.எம்.எம்.முர்ஷித் -
என் மீதும் நான் சார்ந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் பொய்க்குற்றச்சாட்டே கடந்த 27.12.2018ம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் முன்வைக்கப்பட்டவை  எனவும் அதில் எந்தவித உண்மையுமில்லையெனவும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையில் கடந்த வருடத்திற்கான இறுதி அமர்வு கடந்த 27.12.2018ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற போது சபையின் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாமல், அவரது சம்பளம் தவிசாளரினால் பெறப்பட்டுள்ளதென சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக்குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கெதிராகவும் அக்குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்றும் ஊடகவிலாளர் மாநாட்டில் சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா ஆகியோர் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று 02.01.2019ம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலயே பிரதேச சபைத்தவிசாளர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்;.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,
குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 27.12.2018ம் திகதி ஊடகங்களிலும் இணையதளங்களிலும் செய்தி வெளியாகி இருந்த போதும், குறித்த குற்றச்சாட்டோடு தொடர்புடைளய சபை உறுப்பினரான எம்.எம்.ஹனீபா வெளிநாட்டுக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டிருந்தமையால் அவரது வருகையின் பின்னரே நடத்த வேண்டிய நிலையிருந்தது.
சபையின் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வுகளுக்கு தொடர்ந்து முன்று கூட்டங்களுக்கு வருகை தராத பட்சத்தில், சபையின் செயலாளரினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அதனை விடுத்து குறித்த சபை உறுப்பினர் சபைக்கு வருகை தராத போது அவரது கையொப்பத்தையிட்டு சம்பளத்தை பெற்றுக்கொண்டதென்பது உண்மைக்குப்புறம்பானது.
சபை ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது அமர்வுகள் இடம்பெற்றுள்ளது அதில் சபை உறுப்பினர் வரவுப்புத்தகத்தில் ஏழு கூட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக கையொப்பமிட்டுள்ளார். இரண்டு கூட்டங்களுக்கு வருகை தரவில்லை. அதற்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லையென்றும் தெரிவித்தார்.
இதில் கருத்துத்தெரவித்த சபை உறுப்பினரான எம்.எம்.ஹனீபா,
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக்குழுவில் நான் போட்டியிட்டேன். நான் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதேச அமைப்பார். இப்பிரதேசத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கும் எனக்கும் பிரதேச சபைத்தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட கருத்து மோதலினால் தான் நான் சுயேட்சையாகப் போட்டியிட்டேன். நான் முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்தவரல்ல. ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளரும் அக்கட்சின் பிரதேச அமைப்பாளருமாகும்.
பிரதேச சபையின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிக்குமாறு முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். ஓட்டமாவடி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சபையாகவும், ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டுக்கட்சியாகவும் இருப்பதனால், அதனை என்னால் செய்ய முடியாதென்று தெரிவித்த காரணத்திற்காகவே என் மீது அபாண்டமான குற்றச்சாட்டினைத் தெரிவிக்கின்றனர்.
நான் ஒன்பதாவது சபை அமர்வில் ஏழு அமர்வுக்கு வருகை தந்துள்ளேன். சில அமர்வுகள் முடிவடைவதற்கு முதல் வரவுப்புத்தகத்தில் ஒப்பமிட்டு விட்டு தவிசாளரிடமும் செயலாளரிடமும் எனது தேவையின் நிமித்தம் வெளியே சென்றிருக்கிறேன். எனது கொடுப்பனவை தவிசாளர் பெற்றிருந்தால், நான் தான் அவர் மீது குற்றம் சொல்ல வேண்டும். கொடுப்பனவை நானே பெற்றுக் கொண்டுள்ளேன் என்று சொல்லும் போது, அவர்கள் எவ்வாறு தவிசாளர் போலி ஒப்பமிட்டு சம்பளத்தைப் பெற்றார் என்று கூற முடியும்?
முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக்குழு உறுப்பினர் அஸீசுல் றஹீம் தாக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. எனது ஆதரவாளர்கள் தாக்கினர்கள் என்ற குற்றச்சாட்டை நான் முற்று முழுதாக எதிர்க்கிறேன். அக்குற்றச்சாட்டு உண்மைக்குப்பபுறம்பானதென்றும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments