அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நடாத்தப் பட்ட போராட்டம் தற்காலிகமாக உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களின் நேரடி வேண்டுகோளின் பேரில் கைவிடப்பட்டது.
இன்று அலுவலக பணிகளை முடக்கிய பிரதேச சபை உறுப்பினர்களை தமது போராட்டத்தை கைவிடும் படியும் இதற்கான தீர்வினை விரைவில் பெற்றுக் கொடுப்பதாகவும் ACLG உத்தரவாதமளித்தார். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களும் பிரசன்னமாயிருந்தார்.
நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற இடமாற்றமானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் உதுமாலெப்பை அணி என்பன இணைந்தே ஆளுநரிடம் முறையிட்டதாகவும் அரசியல் பழி வாங்கல் முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
தற்போது அவர்களது செயல்பாடுகளுக்கு அப்பால் சபையின் 11 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் ACLG ஊடாக ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. செயலாளர் பாயிஸ் அவர்களுடன் சிலர் கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்வே இச்சிக்கலுக்கான அடிப்படை எனவும் சிலர் பேசிக்கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment