உத்தரதேவி ரயில் சேவையின் வௌ்ளோட்டம் இன்று - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 26, 2019

உத்தரதேவி ரயில் சேவையின் வௌ்ளோட்டம் இன்று


கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை வரையான உத்தரதேவி ரயில் சேவையில், புதிய ரயில் வண்டியின் வெள்ளோட்டம் இன்று (27) முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று காலை கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில்வண்டி புறப்பட்டு சென்றதுடன், இந்த நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, இந்த நிகழ்விற்கு இணையாக, இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களை விநியோக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டுள்ளார்.

வடக்கு, தெற்கு நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் புதிய ரயில் வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.இதேவேளை, குறித்த ரயில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும் இரண்டாம் வகுப்பு பெட்டியும் இதில் அடங்குகின்றன.

அத்தோடு, இந்த ரயிலில் ஒரே தடவையில் 724 பயணிகள் பயணிக்க முடியும்ரயில் வண்டியில் யாழ். பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள், அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages