புதிய கூட்டணி ; நாளை முடிவு


அரசியல் கட்சிகளின் கூட்டணி ஒன்று தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி நாளை ஞாயிற்றுக்கிழமை தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் இந்த கூட்டணி அமையவுள்ளது. எனினும் இந்தக் கூட்டணிக்கான சின்னம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கட்சித் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட்ட சிறுபான்மை கட்சிகள் அங்கம் பெறவுள்ளன.
இதேவேளை, இக் கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்களிக்குமா என்பது தொடர்பில் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், தாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நீதிமன்றத்தை நாடியதாகவும், கூட்டணி அரசில் இடம்பெற மாட்டோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments