அட்டாளைச்சேனை பிரதேச சபையில் என்ன நடந்தது.???

அட்டாளைச்சேனை மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்குடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை இயங்கி வருகின்றது. குறுகிய அரசியல் தேவைகளுக்காக இதனைக் குழப்பும் நோக்குடனேயே சபை செயலாளர் பாயிஸ் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என பிரதேச சபை உறுப்பினர்களான ASM. உவைஸ் மற்றும் T. ஆதீன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

நேற்றைய தினம் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களே இவ்வாறு தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைநடவடிக்கைகள் மிக சிறப்பாக இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். இருப்பினும் காலத்துக்கு காலம் இவ்வாறான நடவடிக்கைகளைமேற்கொண்டு சபையை குழப்பும் ஒரு சிலருக்கு ஆளுநரும் உடந்தையாக இருப்பது மிக வேதனையானதாகும் எனவும் கூறினர்.

கடந்த காலங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களின் குயுக்தி அரசியல் மூலமாக தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான இழிவான அரசியல் கலாசாரத்தை மீண்டும் கையிலெடுக்கும் நடவடிக்கையே இதுவாகும். அட்டாளைச்சேனை மக்களும் நாங்களும் அவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

விசேடமாக அரசியலை நகர்த்தல்களை தேர்தல் காலத்தில் செய்யுங்கள் ஏனைய காலங்களில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு விசுவாசத்தை காட்டுங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அமானிதத்தை நிறைவேற்ற முன் வாருங்கள். நாம் சுமூகமான எல்லா உறவுகளையும் நேசிக்கின்றோம் வரவேற்கின்றோம். அத்துடன்  நாங்கள் மக்கள் சேவைக்கென வரும் சகல சந்தர்ப்பங்களையும் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments