ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை எதிர்க்கும் புலிகள்


-சுரேஷாத் -

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் ஆதரவு ஊடகங்கள் தமது இழி முகத்தை காட்ட தொடங்கியுள்ளன. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கிடமை தொடர்பிலான அக்கட்சியினால் வழங்கப்பட்டுள்ள பதவி ஒன்றினை ஜீரணிக்க முடியாமல், கிழக்கு ஆளுநர் மீது வசைபாடல்களை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இவ்வாறான  முஸ்லீம் இன விரோத மனோ நிலை வெளிப்பாடானது பாசிஸப் புலிகளின்  செயற்பாட்டை ஒத்த செயலாக கருத வேண்டியுள்ளது. 

விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்களையும், மனித உயிர்களையும் காவு கொண்ட பாசிசத்தின் எஞ்சிய எச்சில்களே இன்றும் முஸ்லீம் தமிழ் உறவுகளை பிரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன. இவர்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பமாகும்.

அத்துடன் பதவி ஒன்றின் மீதான எதிர்ப்பு மனோ நிலையே இவ்வாறு இருக்கும் போது தமிழர் விடயத்தில் எவ்வாறாக உடன்படுவது என்பது குறித்த முஸ்லிம்களின் மனோ நிலையை மேலும் சிக்கலாக்கும்.

Post a Comment

0 Comments