Header Ads

Breaking News

தமிழ், முஸ்லிம்கள் பிழையான செய்திகளை தொடர வேண்டாம்

முஸ்லீம் மக்களை சந்திக்கிழுக்கும் வகையிலான தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றது. தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் பாசிச கொடூரர்கள் மீண்டும் எழுந்து வருவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்கி அதன் மூலம் மேற்குலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளோர் தொடர்ந்து வசதிகளுடன் இருக்கவும், இங்கிருக்கும் சிலர் அங்கு ஜீவிக்கவுமே தமது செயற்பாடுகளை முடுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்காக உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடும் சில இணையங்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டு முஸ்லீம் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை உருவாக்கி அவர்களுக்கு தேவையானவாறு திருப்பி வருகின்றமை இப்போது வெளிப் படையாகியுள்ளது. 

எனவே வீணான அல்லது போலியான இணைய மற்றும் சமூக வலைத்தளங்களை நம்பி வீணான தர்க்கங்கள் மற்றும் வார்த்தைப் பிரயோகங்களை செய்ய வேண்டாம் என்றும் நமது நாட்டின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

No comments