About Me

header ads

அஸ்ரப் நகர் விடுவிப்பு, ராணுவத்தினருக்கு நன்றிகள் ; ஏ.எல் எம். நசீர் எம்.பி

அஷ்ரப் நகரில் இருந்து ராணுவத்தினர் வெளியேறி மக்களின் வாழ்க்கைக்கு தேவையான காணியினை விடுவிக்கும் இந்த சம்பவத்திற்காக நாம் ராணுவத்தினருக்கும், கௌரவ ஆளுநருக்கும் விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என பா.உ ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் இன்று ராணுவத்தினர் அஷ்ரப் நகரின் மக்களுக்கு சொந்தமான 39 ஏக்கர் காணிகளில் இருந்து வெளியேறி மக்களுக்கு இடம் வழங்கியுள்ளனர். இருப்பினும் அப்பிரதேசத்தில் மொத்தமாகவுள்ள 150 காணியும் விடுவிக்கப்பட  வேண்டும்.

அம்பாறையில் மொத்த முஸ்லீம் சமூகமும் சிறு நிலப்பகுதிக்குள்ளேயே வாசிக்கின்றது. விசேடமாக வளர்ச்சி பெற்று வரும் முஸ்லீம் சனத்தொகைக்கேற்ற்வாறு நிலமும் ஏனைய வசதிகளும் வழங்கப்படல் வேண்டும் அதற்கான உரிமையும் அவர்களுக்குள்ளது. 

இவ்விடயம் தொடர்பிலாக எமது தலைவர் கௌரவ  அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களூடாக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் எமது கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments