Header Ads

Breaking News

ரணிலின் புதிய கட்சி

புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்துள்ளார். "சியபத்செவன" மாடிக்குடியிருப்பு தொகுதியின் இரண்டாம் கட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் குறித்த புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட ஆராமய பிளேஷில் அமைக்கப்பட்டுள்ள "சியபத்செவன" வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 266 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஆயிரத்து 64 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், 15 மாடிகளை கொண்ட இக்குடியிருப்பில் 437 வீடுகள் முதற்கட்டமாக மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments