அம்பாறையில் மு.காவின் ஸ்திரமான தளம் அட்டாளைச்சேனையே ; நசீர் எம்.பியின் ஆளுமை


-அபூ ஜாஸி -
அட்டாளைச்சேனை அம்பாறை மாவட்டத்தின் மற்றெல்லாப் பகுதிகளையும் விடவும் அதிகமான முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவுத்தளத்தினைக் கொண்டுள்ள ஒரு பிரதேசமாகும். இதில் பலரும் தமது சுயலாபத்திற்காக பல விசமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றமை சமீப காலமாக இடம்பெற்று வருகின்றது. 

இதில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டியதன் பிரகாரம், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் அவர்களின் குடும்பங்களும் பாரிய செல்வாக்குச் செலுத்தின எனலாம். தனி நபர் கௌரவங்களும், குடும்பச் செல்வாக்கும் பாரிய பேசுபொருளாயிருந்த நிலையிலும் முஸ்லீம் காங்கிரஸ் ஏலவே தனது உறுப்பினர்களை களத்தில் நிறுத்தி வெற்றி பெற்றிருக்கின்றது. இந்நிலையே இம்முறையின் தொடர்ச்சியான விளைவாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விசேடமாக அட்டாளைச்சேனை உட்பட பல பிரதேசங்களிலும் தனிநபர் காழ்ப்புணர்வுப் படலம் என்பது இத்தேர்தலில் பலத்த சவாலாக அமைந்திருந்தது. முஸ்லீம் காங்கிரசின் அனுகூலங்கள் அனைத்தையும் அனுபவித்து முஸ்லீம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என கங்கணங் கட்டி செயற்பட்டவர்களை அறிந்து கொள்ள முடிந்தது.

அதேவேளை முஸ்லீம் காங்கிரஸ் இங்குள்ள பிரமுகர்களை சேர்ப்பதன் மூலம் அல்லது பிரிப்பதன் மூலம் பலப்படும் என வெறும் வதந்திகளை கிளப்பி இங்குள்ள கட்சியின் கட்டமைப்புக்கு எதிராக செயற்படுவோர் குறித்து அட்டாளைச்சேனை போராளிகள் தெளிவாக உள்ளார்கள்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் படி மக்களின் வாக்களிப்பு வீதத்தின் படி அட்டாளைச்சேனை முதலாம் இடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் போராளிகளின் அதிருப்தியினை சரி செய்வதாயின் எங்கு ? எவ்வாறு என்பதை மிக இலகுவாக அடையாளம் காணலாம்.

வாக்காளர்களில் எவ்வளவு வீதத்தினர் மு.கா ஆதரவாளர்களாக உள்ளார்கள் என்பதை இதன் மூலம் கணிக்கலாம். அட்டாளைச்சேனை ஆதரவுத்தளம் தனியே ஏ.எல்.எம். நசீர், எம்.பி யுடன் மாத்திரமே இத்தேர்தலை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
  1. அட்டாளைச்சேனை 47.37 (11361)வீதமான வாக்குகளையும் (2011 - 12512)
  2. நிந்தவூர்  47.35 (7931)வீதமான வாக்குகளையும் (2011 - 10355)
  3. இறக்காமம் 38.86 (3283)வீதமான வாக்குகளையும் (2011 - 3196)
  4. சம்மாந்துறை  38.01 (13034)வீதமான வாக்குகளையும் (2011-10078)
  5. பொத்துவில்  30.9 (6114)வீதமான வாக்குகளையும் (2011-7457)
  6. கல்முனை  29.67 (17424)வீதமான வாக்குகளையும் (2011-22356)
  7. அக்கரைப்பற்று   17.88 (3329)வீதமான வாக்குகளையும் (2011 -2819)
  8. அக்கரைப்பற்று   பிரதேச சபை (886) 21.1வீதமான வாக்குகளையும் (2011 - 775)   
தேர்தல் முடிவின் போது பெற்றுள்ளது. 

தமது தனிப்பட்ட பதவி நிலைகளுக்காக தமக்கு சாதகமான சிலரை உள்வாங்க நினைப்பதுவும், பின்னர் அவர்களே அவர்களுக்கு ஆப்படிப்பதுவும் மிக சாதாரணமாகவே கடந்த காலங்களில் நடந்திருக்கின்றது. அட்டாளைச்சேனையிலும் சிலர் தமது சொந்தப் பதவிக்காக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தெளிவானதாகும். 

இந்நிலையின் தொடர்ச்சியாக மிகத்தெளிவாக தேசிய அளவிலும், உள்ளூர் மட்டங்களிலும் அரசியலைக் கையாண்டு வரும் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை பிழையான தகவல்களோடு அணுகுவோர் தமது முகத்திரையை தாமே கிழித்துக் கொள்வதாகவே அமைகின்றது. 
Post a Comment

0 Comments