Header Ads

Breaking News

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவு அறிக்கை நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டது ;தவிசாளர் அமானுல்லாஹ்

பாலமுனை ஷிபான் -
அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகவும் ஏமாற்றப்பட்டோம்,  அவ்வாறு ஏமாற்றியவரை என் வாழ்நாளில் நான் கண்டதே கிடையாது என அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா இன்று தெரிவித்தார். 

இன்று மாலை 7 .30 அளவில் அட்டாளைச்சேனை முனீரா வட்டாரத்தின் முஸ்லீம் காங்கிரஸ் வட்டாரக்கிளை புனரமைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அட்டாளைச்சேனை  பிரதேச  சபையின் இவ்வருடத்திற்கான வரவு செலவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அதை நாம் தேசிய காங்கிரஸ் உப தவிசாளருடன் கலந்துரையாடினோம், அன்றிரவு நான் இரவு உணவினையும் அவருடன்  சேர்ந்தே உண்டேன், அப்போது அவர் எனக்கு உத்தரவாதமளித்தார். ஆனால்  கடைசியில் காலை வாரிவிட்டார்கள். நான் நம்பிக் கெட்டேன். பின்னர் என்னை சந்தித்த யாரும் அவர்கள் அவ்வாறு செய்தது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ஏனெனில் அவர்கள் அவ்வாறுதான் நடப்பார்கள் என்பது எல்லோரினதும் நம்பிக்கை. 

இனிவரும் காலங்களில் பிரதேச சபை எவ்வாறு செயற்படப்போகிறது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றோம். அதேவேளை அபிவிருத்தி தொடர்பில் நாம் பல்வேறு அடைவுகளை திட்டமிட்டிருக்கின்றோம். 

நமது கட்சி இந்நாட்டில் பலமான கட்சியாக இன்று மீண்டும் தமது இலக்கை அடைந்துள்ளது. நமது தலைமை இதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளது. இவற்றை முன்னிறுத்தி நமது சமூகத்தின் தேவைகளை அடைந்து கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments