About Me

header ads

ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி இலங்கை இந்து சம்மேளனம் ஆர்ப்பாட்டம்!



ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்பதாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை குருக்கள் பேரவை என்பன இணைந்து இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும்.
நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைப் புரிந்தவர் அல்ல. நாட்டிற்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஒருவராவார். 
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்

Post a Comment

0 Comments