முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புடனான உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 15, 2019

முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புடனான உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு

ஜனாதிபதியும் -பிரதமரும் உடனடியாக புதிய அரசியலமைப்பு வேலைத்திட்டங்களை கைவிட மகாநாயக தேரர்கள் வலியுறுத்த வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களிடம் தேசிய இணக்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. 
தமிழ் தேசிய கூட்டமைப்பும் -முஸ்லிம் காங்கிரசும் ரணிலுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே இன்று அரசியல் அமைப்பாக வெளிவருகின்றது எனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர். 
மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை இன்று சந்தித்த தேசிய இணக்க சம்மேளனம் இந்த கருத்துக்களை அவர்களிடம் முன்வைத்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். 
இந்த நாட்டில் 72 வீத சிங்களவர்கள் உள்ளனர். அவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது சிறுபான்மைக்கு செவி மடுத்து அரசியல் அமைப்பினை  உருவாக்க பார்க்கின்றனர். 
பிரபாகரன் கொல்லப்பட்டவுடன் பிரச்சினைகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டது. நந்திக்கடல் யுத்தமே அவர்களுக்கான தீர்வு. இப்போது புதிய தீர்வுகளை கூறிக்கொண்டு சுமந்திரன்  போன்றவர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்த முயற்சிகள் இலங்கையின் முயற்சிகள் அல்ல. சர்வதேசத்தின் முயற்சிகள்.
இந்த சம்மேளனத்தில் குணதாச அமரசேக, வசந்த பண்டார, சரத் வீரசேகர போன்ற அமைப்புகள் சார்ந்தோரும் பெளத்த பிக்குகள் பலரும் அங்கம் வகிக்கின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages