போலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 15, 2019

போலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள்திருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத்தர் நான்கு பேர் படுகாயமடைந்தனர். 

யாழ்ப்பாணம், கொடிகாமம் கச்சாய் பகுதியில் நேற்று இரவு (14) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிகக்ப்பபடுகின்றது. 

கொடிகாமம், கச்சாய் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பொலிஸார் சென்றுள்ளனர். 

இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிபர் வாகனத்தை பொலிஸார் மறித்த போது குறித்த வாகன சாரதி பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் மிக கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூன்று பொலிஸாரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.. 

தப்பி ஓடிய வாகன சாரதிகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages