பொத்துவில் தனி கல்வி வலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி, ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலயம், மருதமுனை சம்சுல் இல்ம் ஆகிய பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவது சம்மந்தமாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.முஹம்மட் நசீர் மற்றும் MIM மன்சூர் ஆகியோர்கள் நேரடியாக சென்று கோரிக்கையினை முன்வைத்ததுடன் இது தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் உறுதியளித்தார்.
இச் சந்திப்பில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் வாசித், மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல் அமானுள்ளா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment