Header Ads

Breaking News

மூன்று எம்.பி க்களின் பதவிகள் பறிக்கப்படும்; SLPP சூளுரை

தமிழ் கூட்டமைப்பின் எம்.பிக்கள் மூவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொது பெரமுன வின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பொது பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிடுகையில், 

இரட்டைக்குடியுரிமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசுவாமி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ் தேசியக் கோவூட்டமைப்பில் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டுள்ள மூவரின் தகவல்களை நாம் பெற்றுள்ளோம். 

இது தொடர்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் அணுக முடிவு செய்துள்ளோம். எனவே அவர்களின் பெயர்கள் மற்றும் தகவல்கள்  ரகசியமாக பேணப்படுகின்றன. என்கிறார்.  

No comments