Header Ads

Breaking News

பாராளுமன்ற மோதல் குறித்த விசாரணை இன்று

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று மீண்டும் கூடியது. 


பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் குறித்த குழு இன்று காலை 09.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியதாக பிரதி சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. 

தற்போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கூறியுள்ளார். 

பாராளுமன்ற மோதல் குறித்த செம்மையாக்கப்படாத வீடியோ காட்சிகளைப் பெறுவதற்காக இன்றைய தினம் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த குழு மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 03ம் திகதி கூடவுள்ளது. 

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சமல் ராஜபக்ஷ, சந்திரசிறி கஜதீர, ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர்.

No comments