ரணிலின் அமைச்சரவை இன்று நியமனம்
புதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்படி, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

புதிய அமைச்சரவையில் 30 பேர் மட்டுமே அங்கம் வகிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய அமைச்சரவை பதவியேற்ற பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments