Header Ads

Breaking News

திட்டமிட்டு மஹிந்த பழிதீர்க்கப்பட்டாரா ?


-FAM-
2015ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறீசேன மஹிந்தவினதும் சுதந்தரக்கூட்டமைப்பினதும் அதீத நம்பிக்கைக்குரியவராக இருந்தமை அன்று இருந்த மஹிந்த அணியினருக்கும் கட்சிக்கும் தெரிந்த விடயம் ஆனால் மஹிந்தவுக்கு எதிராக களமிறங்குவார் என கனவிலும் மஹிந்த அன்று எதிர்பார்த்திருக்கவில்லை ஆனாலும் அவரை எதிர்த்து பொதுவேட்பாளராக களமிறங்கினார் சிறீசேன.


பொதுவேட்பாளராக தோன்றுவதற்கு முன்தினம் ஆப்பம் சாப்பிட்டு தேநீர் அருந்தி மஹிந்தவிடம் அழகான முறையில் பேசியிருந்தார் சிறீசேன, இறுதியில் மஹிந்தவுக்கு எதிராக ஆயிரம் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து இறுதியில் வெற்றியும் பெற்றிருந்தார் அவர். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் அன்று ஒட்டுமொத்த சிங்கள மக்களும் மஹிந்தவின் பக்கம் வாக்களித்த போதும் மஹிந்த ஜெயிக்கவில்லை காரணம் சிறுபான்மை மக்கள் மஹிந்தவை எதிர்த்து வாக்களித்தனர்.

முள்ளிவாய்க்காலிலும், ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் கொத்து கொத்தாக தமிழர்கள் செத்து மாய்ந்ததும், அளுத்தக உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் பலியானதும் அவர்களின் சொத்துக்கள் உடமைகள், மத ஸ்தலங்கள் உடைக்கப்பட்டதும் மஹிந்தவை சிறுபான்மை மக்கள் எதிர்க்க முக்கிய காரணங்களாகும்.

இப்படி சிறுபான்மை மக்களால் ஆட்சிக்கு வந்த மைத்திரியும் - ரணிலும் இறுதியில் ஒன்றையும் செய்துவிடவில்லை, திகன உள்ளிட்ட கலவரங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், நிலப்பிரச்சினைகள், என சிறுபான்மை மக்களுக்கு ஆயிரம் வடுக்கள் இருந்தன, ஆனாலும் நல்லாட்சியை சிறுபான்மை மக்கள் குறை சொல்லவில்லை, இந்த ஆட்சி நீதி மற்றும் ஊடக சுதந்திரமிக்கது என மார்தட்டிக்கொண்டனர்.

மற்றுமொரு புறம் பொருளாதார நெருக்கடி, ஏற்றுமதி குறைவு, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, நாட்டில் அபிவிருத்திகள் மழுங்கல் நிலை, ஒருநாட்டிற்குள் இரண்டு கட்சிகளின் ஆட்சி என அரசியல் பொருளாதார குழப்பங்கள் காணப்பட்டது.

இந்த குளறுபடிக்குள்  குளிர்காய்ந்த மஹிந்த தரப்பு தங்களின் இலட்சிய சின்னமான தாமரையில் கட்சி ஆரம்பித்து அதில் தேர்தலை முகம்கொடுத்து அமோக வெற்றயீட்டினர், இது உள்ளுராட்சி சபை தேர்தல் என்றாலும் மத்திய அரசை ஆட்டிவைத்தது, எப்படி மஹிந்தவிடம் இருந்து மைத்திரியை கழட்டி அரசியல் சித்துவிளையாட்டு செய்து ஆட்சியை பிடித்தனரோ அதே பாணியில் மீண்டும் இயங்க ஆரம்பித்தனர்.

மொட்டையும் மஹிந்தவையும் பலமிழக்க செய்ய சூழ்ச்சி செய்ய ஆரம்பித்தனர். மைத்திரி ரணிலை எதிர்த்தார், மஹிந்தவு்க்கு வாய்ப்பு வழங்கி ஆதரித்தார், இவை அரசியலமைப்பை மீறி நடைபெற்றது, பணப்பட்டுவாடா செய்யப்பட்டது, இறுதியில் மீண்டும் நீதி வெற்றியீட்டியது.

மீண்டும் மஹிந்த மண்கவ்வினார், இதனால் அவரும் அவர் படையும் ஆட்டம் கண்டது, மொட்டு என்ற கட்சி அரசியல் ரீதியாக தோல்வியுற்றது, எந்த சிங்கள மக்கள் ஆதரித்தனரோ அவர்கள் இன்று எதிர்க்க ஆரம்பித்தனர்,

இது திட்டமிட்டு மஹிந்தவை பலமிழக்க செய்த மிகப்பெரும் சூழ்ச்சியேன்றி வேறில்லை,

No comments