பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரஞ்சித் மத்தும


கிளிநொச்சியில்  ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார  நேரில் சென்று பார்வைிட்டுள்ளார்.

அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிவமோகன், அமைச்சின் செயலாளர், அரச அதிபர்  ஆகியோரும் சென்றிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருபது  நலன்புரி நிலையங்களில் இரண்டிற்கு விஜயம் மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடியதோடு, அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments