Header Ads

Breaking News

முஸ்லீம் காங்கிரசின் தலைமைத்துவமே இந்த ஆட்சியின் அடிப்படை


- அன்வர்.ஜே.நௌஷாத் -
நடந்து முடிந்த அரசியல் சதி மற்றும் ஜனநாயக விரோத பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் எம்.பிக்களின் அர்ப்பணிப்பு மிகப் பெறுமதியானது. சமகாலத்தில் முஸ்லீம் சமூகத்தின் உறுதியான தன்மானக் காப்பு போராட்டம் என்றே இதை நாம் கொண்டாட வேண்டியுள்ளது. 

இந்நிலையில் பாராளுமன்ற பிரதிநிதிகளே இல்லாத கட்சியும் அதன் ஆதரவாளர்களும், அரசியல் நிதர்சனம் புரியாத சில சகோதரர்களின் பதிவுகளும்  சமூகத்தை பெரிதும் மனச்சஞ்சலத்திற்குட்படுத்தி வருகின்றது.

சிலரின் கூற்றுப்படி 

கூற்று 01. தமிழ் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியோடு சேர்ந்ததால் தான் முஸ்லீம் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு 
மிகப் பிழையான கூற்று, முஸ்லீம் எம்.பிக்களின் கடைசி வரைக்குமான உறுதியான நிலைப்பாடே சகல கட்சி உறுப்பினர்களையும் தக்கவைத்தது. 

கூற்று 02. இவர்கள் சேர்ந்தாலும் பெரும் பான்மை கிடைக்கும் நிலை இல்லை 
அரசியல் நிலை புரியாதவர்கள் கூற்று கடைசி வரைக்கும் அவ்வாறு நிலையே காணப்பட்டது. இப்போது காணப்படும் பெரும்பான்மையிலிருந்தும்(த.தே.கூ உட்பட) 117 முஸ்லீம் எம்.பிக்கள் 12 யை கழித்தல் செய்தால் 105 எம்.பி க்கள் ஜே.வி.பி யின் 6 எம்.பிக்கள் ஐ சேர்த்தால் மொத்தம் 111. ஆகவே மஹிந்த அணி ஆட்சியமைப்பதில் எந்த தடங்கலும் இருந்திருக்கப் போவதில்லை.



அதேவேளை முஸ்லீம் எம்.பிக்கள் அவரோடு பேசினார்கள், பசிலோடு பேசினார்கள், நாமல் ராஜபக்சவை தூது பேசினார்கள், என்பதெல்லாம் அரசியலில் அன்றாடம் நிகழும் சம்பவங்கள். மஹிந்த -ரணில் பேசலாம், ரணில் - மைத்திரி பேசலாம், விமல் - ராஜித பேசலாம் என்றால் எங்களது தலைமைகளும் பேசிவரும் எவரோடும் பேசலாம், நிபந்தனைகள் விதிக்கலாம், தங்களது சமூக தேவைகளை உணர்த்தலாம் இதற்க்கெல்லாம் அவர்களுக்கு உரிமை இருக்கின்றது.

தனிப்பட்ட பெறுமதிகள் அவர்களுக்கு விலைகளாக பேசப்பட்டிருக்கும், அல்லது தனிப்பட்ட தேவைக்காக அவர்கள் சிக்கலான பாதைகளோடு பேசியிருந்தால் அவர்களை கட்சித்தலைமை மிக நன்றாக விளங்கியிருக்கும். பொதுத்தேர்தலொன்றில் அவர்களுக்கான நியாயம் கற்பிக்கப்படும்.

முஸ்லீம் காங்கிரசின் தலைமை அளவுக்கதிகமாக மஹிந்த ராஜபக்ஷே விடயத்தில் மூக்கை நுழைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொது பெரமுன மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் ஆளாளுக்கு போட்டி போட்டு கருத்துக்களை வெளியிடுவதென்பது தத்தமது எஜமான விசுவாசத்திற்காகவன்றி வேறில்லை. மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாடு என்பதைக் காட்டிலும் ஜனநாயகத்திற்கான ஆதரவு என்பதே  சாலப்பொருத்தமாகும்.

இந்நிலையில், முஸ்லீம் சமூகத்தின் மீதான காழ்ப்புணர்வும், தனிப்பட்ட ஆற்றாமை மற்றும் தேவைகளுக்காக தங்களது கருத்துக்களையும் இயலாமையையும் பொதுத்தளங்களில் முஸ்லீம் தலைமைகளுக்கு எதிராக கருத்தாடல்கள் செய்வதென்பது சமூகத் துரோகமன்றி வேறில்லை. 

No comments