தேசிய அரசின் பங்காளி முஸ்லீம் காங்கிரஸ் ; அதிரடி அரசியல் ஜேவிபி எதிர்ப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, December 24, 2018

தேசிய அரசின் பங்காளி முஸ்லீம் காங்கிரஸ் ; அதிரடி அரசியல் ஜேவிபி எதிர்ப்பு



தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதில் உள்ள சட்ட சிக்கள்களுக்கு தீர்வுகாண ஐக்கியதேசிய முன்னனி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்று அமைப்பதற்கான அழைப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னனியால் விடுக்கப்பட்ட கோரிக்கையினையே ஜனாதிபதி இவ்வாறு நிராகரித்துள்ளார்.
அத்துடன் அமைச்சரவையை உருவாக்கும் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முரன்பாடுகளை தொடர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ற்கு மேல் அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும். இவ்வாறான சிக்கல் ஒன்றின் மூலமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசு ஆட்டம் காணும் என்பதே எதிர்தரப்பின் பிரதான நிலைப்பாடு. 
அவ்வாறு அமைக்கப்படுமாக இருந்தால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 அதிகரிக்க முடியும் இன்நிலையில் ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்குவதற்கும் இருக்கின்ற ஒரே வழி தேசிய அரசாங்கம் ஒன்று அமைப்பதே ஆகும் எனவே அதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது.
"ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடனோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனோ இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயன்றுவருவாக தகவல்கள் வெளியாகியுள்ளது"
எது எவ்வாறு இருப்பினும் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் என்ற பிரேரணையை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்தால், அதனைத் தோற்கடிக்க செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
19 ஆவது திருத்தச் சட்டத்துக்குள் ஓட்டை போடுவதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க பாராளுமன்றத்தில் இடமளிக்கப் போவதில்லை.
பெரும்பான்மைப் பலமுள்ள கட்சியுடன் ஒரு கட்சியிலிருந்து ஒருவர் சேர்ந்தாலும் தேசிய அரசாங்கம் அமைக்க முடியும். இதனால், 30 பேர் கொண்ட அமைச்சரவையை 45 ஆக அதிகரிக்க முடியும்.
இருப்பினும், இவை அனைத்தையும் பாராளுமன்றத்தின் அனுமதியுடனே முன்னெடுக்க வேண்டும். இதற்கு ஒரு பாராளுமன்றத்தில் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென்பதை மக்கள் விடுதலை முன்னணி உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages