Header Ads

Breaking News

முஸ்லீம்களின் பங்களிப்போடு நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கின்றது ; ஏ.எல்.எம். நசீர் ,எம்.பி


-அபூ ஜாஸி - 
இன்று நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலமாக நமது ஜனநாயகமும், நீதித்துறையும் புடம் போடப்பட்டிருக்கின்றது என முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் இருந்து நமது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதியினால் பாராளு மன்றைக் கலைத்து கடந்த மாதத்தில்  வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை செல்லுபடியற்றதென உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. இது நமது மக்களுக்கும், நாட்டுக்கும் மகிழ்ச்சியான தருணமாகும். இன்றைய தீர்ப்பிணை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டு இக்கணமே பாராளுமன்ற பெரும்பான்மையுள்ள கட்சித் தலைவருக்கு பிரதமர் பதவியை வழங்கவேண்டும்.

நமது கட்சித் தலைமை கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் சாணக்கியம் மிக்க நகர்வுகள் நமது நாட்டின் வரலாற்றில் பதியவேண்டியவை. இலங்கை நாட்டின் மக்களாட்சிக்கு அவரின் பங்களிப்பு மிக இன்றியமையாதது. 

அதேவேளை, பொருளாதார ரீதியில் ரூபாவின் வீழ்ச்சியும், டாலரின் ஏற்றமும்  சாதாரண மக்களிடையேயும் இன்று பல நஷ்ட்டங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த தருணத்தில் பொருளாதார ரீதியில் மக்கள் பலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை  அமையப்பெறும் அரசாங்கம்  மேற்கொள்ள வேண்டும். 

விஷேடமாக, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்பிலான பிரச்சனைகளை நாம் அரசின் பங்களிப்பினூடாக நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் எமது கட்சியும் நாமும் செயற்படுகின்றோம். நமது மக்களின் தேவைகளை நிவர்ப்பதில் நாம் மிக ஆழமாக செயற்படுகிறோம். எனவும் கூறினார். 

No comments