Header Ads

Breaking News

மீண்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம் !!! முஸ்லீம் காங்கிரசுக்கு தோல்வியா ???

மீண்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம் !!! முஸ்லீம் காங்கிரசுக்கு தோல்வியா ???
முஸ்லீம் காங்கிரஸ் ஆளுகைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ல் பாயிஸ் இன்று முதல் செயற்படும் வண்ணம் நிந்தவூர் பிரதேச சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
முஸ்லீம் காங்கிரசின் தவிசாளர் உறுப்பினர்களுடன் இவர் நெருங்கிச்செயற்படுவதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அ.இ.ம.க மற்றும் தே . கா. அணியினர் கிழக்கு ஆளுநர் அவர்களிடம் முறையிட்டதன் விளைவாகவே இவ்விடமாற்றம் இடம்பெறுள்ளதாக அறியக்கிடைக்கிறது. 
முஸ்லீம் காங்கிரஸ் அரசில் பலமான  பங்காளியாக உள்ள நிலையில் ஆளுநரால் பணிக்கப்பட்டுள்ள இவ்விடமாற்றம் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வருட முடிவுச் செயற்பாடுகள் மற்றும் தொடர் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற  நிலையில் இவ்விடமாற்றம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்விடமாற்றம் தொடர்பில் அட்டாளைச்சேனை  பிரதேச  சபை உறுப்பினர்களும்  மக்களும் ஆளுநர் எதேச்சாதிகாரமாக செயற்படுவதற்கெதிராக பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments