About Me

header ads

அழிந்து கொண்டிருக்கும் ஒலுவில்


- அன்வர் ஜே நௌஷாத் -
''இலங்கை முஸ்லிம்களின் தீர்வுப் பொதியின் கற்பனை அலகு தென்கிழக்கு அதன் தலை நகரம் ஒலுவில். அதன் சிறப்பை இன்னும் மெருகேற்றும் நோக்குடனேயே தென் கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் என்பவற்றை நிறுவினோம் ; மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் பனிக்கூற்று''.

முஸ்லீம் சமுகத்தின் பல்வேறு நலன்களை  பின்னணியில் காரணங்களாக கொண்டு உருவாக்கப்பட்டதே ஒலுவில் துறைமுகம். ஆரம்பம் முதல் ஒலுவில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான எவ்விதமான அடிப்படை அம்சமும் அதில் இருக்கவில்லை. இந்நிலையில் கடலரிப்பு என்பது சர்வ சாதாரணமாகிவிட்ட ஒரு சொல் இந்த கிராமத்தில் வாழும் மக்களுக்கு. 

உலக வரைபடத்தில் புயல்களுக்கு பெயர் போன வங்காள விரிகுடாவில் கிழக்கிலும், உலகின் பெருங்கடலான பசுபிக்கின் மேற்கிலும் விசேடமாக கடைசி நிலப்பரப்பாகவும் ஒலுவில் ஆழ்கடல் அமையப்பெற்றிருக்கின்றது. தொடர்ச்சியாக மாறி வரும் காலநிலை மாற்றங்களையும் கடலின் சீற்றங்களையும் ஒருங்கே சமாளிக்க வேண்டிய கட்டாயத்தை ஒலுவில் மக்கள் மீது இப்போதைய நிலை திணித்துள்ளது.

கடந்த 10 நாட்களாக வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற தாழமுக்கம், புயலாக வலுவடைந்து பின்னர் கடல் கொந்தளிப்பு நிலை தோன்றியது. இது சாதாரண நிகழ்வாக இருப்பினும் ஒலுவில் மக்களின் வாழ்வில் இன்னொரு பேரிடரை துவக்கியுள்ளது அதுதான் 'பண் புல்' தொழிலாளிகளின் வாழ்வியல் அடிப்படையையம் முற்றாக அழித்துள்ளது. 
நேற்று மாலை (17.12.2018) 6.00 மணியளவில் எடுத்த புகைப்படங்கள் 


 ஏற்கனவே கரைவலை தொழிலாளிகளின் ஜீவனோபாயம் தடைப்பட்டுள்ளதுடன், கடற்கரை யோரமாக இருந்த சுமார் நான்காயிரம் தென்னை மரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக ஊரின் முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். 


இவை எல்லாவற்றிற்கும் மேலாக தினமும் கடல் சராசரியாக 2 அடி தூரம் உள்நோக்கி வருகின்றமையை நாம் அவதானித்திருக்கின்றோம். மேலும் கடந்த நான்கு மாதங்களுக்குள்ளாக இந்தக் கடற்கரையில் இருந்த ஆலமரம், இப்போது உருச்சிதைக்கப்பட்டிருக்கின்றது. அந்த இடம் முழுதுமாக கடலால் உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரே தினத்தில் எமது கண் முன்னே 12 தென்னை மரங்கள் கடலில் உள்புறத்தே சென்று விட்டன என கண்கலங்கிய அந்த தேக்கிலைக்கு பல்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் கூற்றில் நாம் கலங்கி விடவேண்டியுள்ளது. 

 சிதைந்து விட்ட ஆலமரம் 
உயிருடன் இருந்த ஆலமரம் 

தென்னைமரங்கள் கடலுள் மூழ்கின 

இப்போதைய சூழலில் உலகின் காலநிலை மாற்றம் வங்காள விரிகுடாவில் இப்போது எதிரொளித்துக் கொண்டிருக்கின்றது. அத்தோடு விஞ்ஞானிகளின் எச்சரிக்கைப் பிரகாரம் உலகின் வெப்ப நிலை தினந்தோறும் அதிகரித்து வருகின்றது. இந்நிலை நமது கடலில் சங்கமிக்கப் போகும் ஐஸ் மலைகளின் உருகு நிலை நமது கடலின் உயரத்தை குறைந்த பட்சம் 1 அடியாவது உயர்த்துமாயின் நமது ஒலுவில் மக்களின் நிலை என்ன ? 

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக இத் துறைமுகத்திற்கு விஜயம் செய்த துறைமுக அமைச்சர் இத்துறைமுகத் தின் விரிவாக்களுக்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என கூறியிருந்தார். அவற்றை அமுல் நடத்த வேண்டிய கட்டாயம் இப்போது எழுந்துள்ளது. 

கற்களை கடற்கரை முழுதும் பரப்பி அதன் மூலம் தீர்வு தேடுகின்ற தற்காலிக இதற்கான விடையல்ல. அவ்வாறாயின் ஒலுவில் என்ற நாமத்துக்கு பகரமாக அட்டப்பள்ளம், நிந்தவூர், காரைதீவு என பெயர் மாற்றங்கள் தான் ஏற்படும். நிரந்தர தீர்வொன்றினை நோக்கி பயணிக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலை இப்போது தோன்றியுள்ளது. 

கடலையும் நமது கரையோரத்தையும் நாமே பாதுகாப்பதுடன், விழிப்புடன் முயற்சிக்க வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது அத்துடன் கரையோரப் பிரதேசத்தில் இருக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் கடமையாகும். 

களஆய்வு : அன்வர் நௌஷாத் 
பட உதவி : விரிவுரையாளர்- SEUSL 
களப்பிடிப்பு : ஷிபான் 

Post a Comment

0 Comments