Header Ads

Breaking News

சென்ற அரசும் ஜனாதிபதியும் முஸ்லிம்களின் பிரச்னைகளை தீர்க்கவில்லை ; ஏ.எல்.எம். நஸீர், எம்.பி அதிரடி



- அலுவலக செய்தியாளர் - 
நல்லாட்சி அரசு மூன்றரை வருடங்களை கடந்துவிட்டது ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

அந்த உரையில்,
விசேடமாக, பொத்துவில் கல்வி வலயம் , வட்டமடு காணி விவகாரம், நுரைச்சோலை வீட்டுத்திட்டம் , அஷ்ரப் நகர் காணி விவகாரம் என பல விடயங்களை தொட்டுக்க காட்டியதுடன், முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை,  பள்ளிவாசல் பிரச்சினை, கல்வி மற்றும் இதர பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே இருக்கிறது, முஸ்லிம் விவசாயிகள் தங்களுடைய நிலங்களை இழந்திருக்கிறார்கள்.

அம்பாறை உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினை இன்னும் முடிவுறாமலேதான் இருக்கிறது, பொத்துவில் தனிக்கல்வி வலயம் இன்னும் பெற்றுத்தரப்படவில்லை.

என உரையாற்றினார், குறித்த உரை நல்லாட்சி அரசின் அசமந்த போக்கை காட்டுவதாக அமைந்திருந்தது.

அத்துடன் ஜனாதிபதி இன்று நடந்து கொள்ளும் விதம் அரசியலில் மிக சிறு பிள்ளைத் தனமாக உள்ளது, மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளை அரசியலில் தின்னம்தோறும் காட்டிக்கொண்டிருக்கின்றார். இது இந்த நாட்டுக்கு மிக மோசமான முன்னதாரணமாகும் எனவும் குறிப்பிட்டார். 

No comments