Header Ads

Breaking News

ஏ.எல்.எம்.நசீர் எம்.பி ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவன்


ஏ.எல்.எம்.நசீர் எம்.பி ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவன் 

அட்டாளைச்சேனையில் மிக குறுகிய காலத்தில் அரசியல் அதிகாரம் பெற்று  தனது அர்த்தமுள்ள அரசியல் மூலம் அம்பாறை மாவட்டத்திலும் , கிழக்கு மாகாணத்திலும் மிக ஆளுமையான அரசியலை நகர்த்தி வரும் ஒரு தலைமையே நசீர் எம்.பி என முஸ்லீம் காங்கிரசின் அட்டாளைச்சேனை  பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன்  தெரிவித்தார்.

நேற்று ஒலுவில் க்ரீன் வில்லாவில்  இடம்பெற்ற  சமகால அரசியல் கலந்துயாடல் நிகழ்வின்  போதே இவ்வாறு  கூறியுள்ளார். 

பலரது பகற்கனவுகளை முறியடித்து அட்டாளைச்சேனையின் பாராளுமன்றத் கனவினை நனவாக்கி இன்று நமது பிரதேசம்  வெற்றி காணும் பல அபிவிருத்திகளை நமது காலடிகளில் காட்டியுள்ளார். கட்சிக்குள் இருந்தும் புறம்பிலுமாக பல்வேறு எதிரி முகாம்களை தனது ஒரு கையால் தடுத்து மறு கையால் நமது மக்களை வாரியணைத்து அரசியல் செய்யக்கூடிய ஆளுமை அவரிடம் மாத்திரமே இருக்கின்றது. 

அவரிடம் ஒலுவில் பாலமுனை,அட்டாளைச்சேனை என்கின்ற பாகுபாட்டினை நாம் காணவில்லை. இப்பிரதேசம் அட்டாளைச்சேனை என்கின்ற ஒருமைப்பாட்டோடு பணியாற்றும் ஒரு தலைமையாகவே நான் காண்கிறேன். ஆனால் சிலருக்கு இதனைப் பொறுத்துக்க கொள்ள முடியவில்லை. வீணான தர்க்கங்களை வேண்டுமென்றே முஸ்லீம் காங்கிரசின் மீதும் அதன் தலைமைகள் மீதும் தெளித்து வருகின்றார்கள். 

இந்த மண்ணின் 35 வருட ஏக்கம் இப்போது தீர்க்கப்பட்டிருக்கின்றது. நம்மவர்கள் பலர் அரச தொழில் பெற்றிருக்கின்றார்கள். வீதி அபிவிருத்திகளும் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பாராளுமன்றத் பதவிக்காலம் இன்னும் ஒரு வருடம் நீடித்தால் இன்ஸா அல்லாஹ் நமது பிரதேசத்தில் எல்லா வீதிகளையும் கான்கிரீட் வீதிகளாக்க திட்டமிட்டிருக்கின்றோம். 

வீணான வதந்திகளை சிலர் தமது தனிப்பட்ட தேவைகள் நிறைவேறவில்லை என்பதற்காக பரப்பி வருகின்றார்கள். அவர்களை மக்கள் சரியாக இனங்கண்டிருக்கின்றார்கள். உண்மையான சமூகப்போராளிகள் சில சில்லறைகளுக்காக ஒரு போதும்  சோரம் போக மாட்டார்கள். 

ஒரு சிலர் தமது ஆயுட்காலம் முழுதும் நமது மண்ணுக்கு துரோகம் செய்துவிட்டு இன்று இந்தக் கட்சியோடு சங்கமிக்க காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களையும்  நாம் மிக மரியாதையோடு வரவேற்க்கின்றோம். இந்தக் கட்சி  அனைவரையும் அரவணைத்து செல்லவே விரும்புகின்றது. யாரையும் நாம் புறக்கணிக்கப்போவதில்லை. எமது தலைமையும் அவ்வாறான சிந்தனைகளுடனேயே பயணிக்கின்றது எனவும் கூறினார். 

No comments