மஹிந்தவுக்கு தொடர் தோல்வி

(நா.தினுஷா) 
மஹிந்தவின் அரசியல் பயணம் தொடர் தோல்வியினையே சந்தித்துவருகின்றது. பிரதமர் பதவிக்கு போராடி படும் தோல்வி கண்டு இன்று மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் பதவியினை பொறுப்பேற்ப்பதிலும் போட்டியிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் மேலும் குறிப்பிடுகையில், 
மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் தோல்வியினையே சந்தித்து வருகின்றன.
 பிரதமர் பதவியை பரித்துக்கொள்வதற்காக எடுத்த முயற்சியும் மஹிந்தவுக்கு பாரிய சவாலாக அமைந்திருந்தது. தற்போது எதிர்தரப்பு ஆசனத்தில் அமர்ந்தும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு இரண்டு தெரிவுகள் எழுந்துள்ளன. 
செய்யும் திருட்டு செயற்பாடுகளையும் முறையாக செய்யமுடியாத பொய்காரர்களாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன தரப்பினர் மாறியுள்ளனர். 
மறிந்த உள்ளிட்ட  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் பொதுஜனபெரமுனவின் உருப்புரிமையை ஏற்றிருந்தனர். தற்போது எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சவால் உருவாகிவிட்டது என தெரிந்ததும் தெளிவாக பொய்கூறி உண்மைகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.

Post a Comment

0 Comments