Header Ads

Breaking News

நிபந்தனையின்றிய ஆதரவை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ; சிவாஜி லிங்கம்




ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும் சகல கட்சிகளும் இணைந்து எடுத்த ஒரு முடிவல்ல என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

அன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூடுகின்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை கூட்டமாமல் எடுத்த முடிவுதான் அது. அதை அவசரப்பட்ட முடிவாகவே நான் கருதுகின்றேன். 

இதனால்தான் நேற்று நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று எமது டெலோ அமைப்பின் சார்பில் நாங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார். 

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்க தவறுமாக இருந்தால் டெலோ கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயற்பட மாட்டார்கள் என எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

No comments