Header Ads

Breaking News

முஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டார்


ஓட்டமாவடி பிரதேச சபையில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த முஸ்லீம் காங்கிரசின் பிரதேச சபை உறுப்பினர் அசீசுர் ரஹீம் (ஆசிரியர்), அதன் பின்னணி மற்றும் சந்தேகத்தின் பேரில்   குறிப்பிடப்படும் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உறுப்பினர் அசீசுர் ரஹீம் கருத்து தெரிவிக்கையில்,  ஊழல் தொடர்பாக வெளிப்படையாக சபையிலிருந்து சில தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சபைக்கு சுமார் நண்பகல் 2.45 மணியளவில் பிரதேச சபை உறுப்பினர்களான மெளலவி எம்.ஐ. ஹாமித், அஸீசுர்ரஹீம் ஆகியோர் சென்றுள்ளனர்.
அவசர வேலையின் நிமித்தம் அங்கிருந்த சக  உறுப்பினர் மெளலவி ஹமீத் சபையில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த சபையின் தியாவட்டவான் வட்டாரப்பிரதிநிதி அஸீஸ் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சுமார் மாலை 3மணியளவில் சபையினை விட்டு வெளியேறி வரும் போது சபை முன்றலில் வைத்து மூவரினால் தாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் பிண்னனியில் ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் சுயேட்சை கட்சியில் போட்டியிட்டு இரண்டாம் வட்டாரத்தில் தேல்வியடைந்து பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.ஹனீபாவின் புதல்வரும் அவரின் ஆதரவாளர்களும் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் எமக்குத்தெரிவித்தார்.
இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் தவிசாளருக்கும் பிரதான பங்குண்டு என சந்தேகம் நிலவுவதுடன் விரைவில் இந்த ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கக்கோரி ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவில் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவுள்ளதாக குறிப்பிட்ட அவர், இன்று மாலை இத்தாக்குதல் குறித்து பிரதேச சபை உறுப்பினர் அஸீசுர்றஹீம் வாழைச்சேனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப்பதிவு செய்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் வைத்திய சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments