முஸ்லீம் காங்கிரசின் இருவரின் ஆதரவுடன் ஓட்டமாவடி பிரதேச சபை பட்ஜெட் வெற்றி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 6, 2018

முஸ்லீம் காங்கிரசின் இருவரின் ஆதரவுடன் ஓட்டமாவடி பிரதேச சபை பட்ஜெட் வெற்றி


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (06.12.2018) நடைபெற்ற விஷேட சபை அமர்வில் கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வரவு செலவுத்திட்டமானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பிரதேச மக்களதும் தேவைகளை முன்னுரிமைப்படுத்தியதான விஷேட வேலைத்திட்டங்கள் அடங்கி வரவு செலவுத்திட்டம் என்பதை ஏற்றுக்கொண்டு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் 12 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

பொது நிர்வாகம், சுகாதார சேவை, பௌதீகத் திட்டமிடல், பொதுப்பயன்பாட்டுச் சேவை, குடிநீர் விநியோகம், நலன்புரிச்சேவை என்பற்றுக்கான நிதியொதுக்கீட்டுடன் விஷேட வேலைத்திட்டங்கள் அடங்கியதாக கௌரவ உறுப்பினர்களது முன்மொழிவுகள் பெறப்பட்டு இவ்வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். உயதமாகும் 2019ஆம் ஆண்டானது இப்பிரதேச மக்களுக்கு சிறந்ததாகவும் அபிவிருத்தி நிறைந்த ஆண்டாக மலர வேண்டுமென்பதும் ஓட்டமாவடி பிரதேச சபையின் கௌரவ மக்கள் பிரதிநிதிகளது எதிர்பார்ப்பாகும்.

எமது பிரதேச மக்களது தேவைகள், பிரதேச அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சபையின் வரவு செலவுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் விசேடமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் (சுயேட்சைக்குழு) உறுப்பினர்களாக திருமதி. ஜெஸீமா, திருமதி. மாஜிதா ஆகியோருக்கும் கௌரவ தவிசாளர். ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages