Header Ads

Breaking News

பாரளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீருக்கு நாளை மக்கள் வரவேற்பு


இலங்கை மக்களின் ஏகோபித்த ஜனநாயக ஆதரவு வெற்றியாக பரிணமித்துள்ளதை கொண்டாடும் முகமாக முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லீம் காங்கிரசின் அரசியல் விவகார செயலாளரும் அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லீம் காங்கிரசின் அமைப்பாளருமான கௌரவ.ஏ.எல்.எம். நசீர் அவர்களை அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச மக்கள் வரவேற்கும் நிகழ்வுகள் நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

கடந்த கால அரசியல் நிகழ்வுகளில் சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வரும் பா.உ  ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் அம்பாறை மாவட்ட மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments