எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது - த.தே.கூ. திட்டவட்டம்ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும்  இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. 
ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது. 
எனவே  எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததை  அடுத்து மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தமக்கு  எதிர்க்கட்சி தலைவர் பதவுயிம் அந்தஸ்தும் வேண்டும் என முரண்பட்டு வருவதுடன் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இது குறித்து முறையிடவும் உள்ளனர். 
இந்நிலையில் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியாக தற்போது செயற்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைபின் நிலைப்பாட்டினை வினவிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments